அரசியலில் குதித்த நடிகை ஷகீலா: அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
நடிகை ஷகிலா யாரும் எதிர்பார்க்காத வகையில் அரசியலில் குதித்துள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறையில் இணைந்துள்ளார்.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஏராளமான படங்களை நடித்திருப்பவர் ஷகிலா, இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளளே உள்ளது. இதனிடையே சமீபகாலமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
கடந்த வாரம் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் ஷகிலா எலிமினேட் செய்யப்பட்டாலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களின் ஆதரவு குவிந்து வருகிறது. தற்போது அவருக்கு என்று தனி இமேஜ் உருவாகியுள்ளதாக சினிமாத்துறையில் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை ஷகிலா யாரும் எதிர்பார்க்காத வகையில் அரசியலில் குதித்துள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறையில் இணைந்துள்ளார். அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் உறுப்பினர் அட்டையை கொடுத்து வரவேற்றுள்ளனர். இது பற்றிய புகைப்படங்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.