முழுவீச்சில் துவங்கும் சிம்புவின் பத்து தல - அடுத்த மாதம் முதல் ப்ரோமோஷன் பணிகள்

சிம்புவின் பத்து தல படத்தின் பிரமோஷன் அடுத்த மாதம் முதல் துவங்குகிறது.

Update: 2022-09-24 09:06 GMT

சிம்புவின் பத்து தல படத்தின் பிரமோஷன் அடுத்த மாதம் முதல் துவங்குகிறது.




 

'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தபடியாக நடிகர் சிம்பு நடித்து வரும் படம் 'பத்து தல' இப்படத்தை கிருஷ்ணா இயக்கி வருகிறார். இப்படத்தில் கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சிம்பு படத்தில் தாதாவாக நடித்து வருகிறார்.




 

இந்த நிலையில் 'பத்து தல' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 27ஆம் தேதி துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் நடைபெற உள்ள இந்த அடுத்த கட்ட படப்பிடிப்பில் சிம்புவுடன் பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட படத்தின் மற்ற நடிகர்களும் பங்கேற்க உள்ளனர். படத்தின் பிரமோசனை அடுத்த மாதம் முதல் பட குழு துவங்க உள்ளது.




Similar News