சிம்புவின் ஹிட் படம் 2 - பாகம் அறிவிப்பு - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
சிம்புவின் ஹிட் படம் 2 - பாகம் அறிவிப்பு - உற்சாகத்தில் ரசிகர்கள்.!;
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. தற்போது அவரது உடல் எடையை குறைத்து பல படங்களில் கமிட்டாகி உள்ளார்.
இந்நிலையில் இவர் நடித்த 'போடா போடி' என்ற திரைப்படம் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது பிரபலமாக இருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் முதல் படம் இதுதான் என்பதும் வரலட்சுமி நடிகையாக அறிமுகமான படமும் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் போடா போடி படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் உருவாக வாய்ப்பு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இது குறித்த தகவல் உறுதி என தகவல் வெளிவந்துள்ளது.
போடா போடி படத்தை தயாரித்த படம்குமார் என்பவர் போடா போடி படத்தின் 2-ம் பாகத்தையும் தயாரிக்க இருப்பதாகவும் சிம்பு இந்த படத்தில் நடிக்க இருப்பதையும் உறுதி செய்துள்ளார். மேலும் சிம்பு ஜோடியாக இந்த படத்தில் ரித்திகா பால் என்பவர் அறிமுகமாக இருக்கிறார்.
முதல் பாகம் போலவே இந்த படமும் இசை சம்பந்தப்பட்ட படம் தான் என்பதும் முழுக்க முழுக்க வெளிநாட்டில் லண்டனில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்படியும் ஒரு இசை, நடனம் சம்பந்தப்பட்ட திரைப்படம் என்பதால் முதல் பாகத்தில் இசையமைத்த தரன் குமார் இந்த படத்திலும் இசை அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிம்புவின் சூப்பர் ஹிட் வெற்றி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை அறிந்து அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.