சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தில் இணைந்த முன்னணி இரண்டு பிரபலங்கள்.!

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தில் இணைந்த முன்னணி இரண்டு பிரபலங்கள்.!

Update: 2021-02-04 16:16 GMT

தமிழ் சினிமாவில் சிறு படங்கள் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அந்த வகையில் தற்போது இவர் நடிக்கும் படம் "டான்". இப்படத்தில் யார் நடிக்க இருக்கின்றனர் என்ற தகவல்  கசிந்த வண்ணம் இருந்த நிலையில்,  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்த படத்தில் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் அதனை அடுத்து எஸ்ஜே சூர்யா, வில்லன் வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வந்தது.

இந்த அறிவிப்பு ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது இப்படத்தில்  மேலும் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. டான் படத்தில் பிரபல தமிழ் நடிகர் சமுத்திரக்கனி மற்றும் நகைச்சுவை நடிகர் சூரி ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar News