இனி சிவகார்த்திகேயனை அடிக்கடி தெலுங்கு படத்தில் பார்க்கலாம் - ஏன் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது தெலுங்கு மொழி கற்றுக் கொண்டு வருகிறார்.

Update: 2022-08-09 12:36 GMT

நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது தெலுங்கு மொழி கற்றுக் கொண்டு வருகிறார்.


 



இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் படம் 'பிரின்ஸ்' இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார், மேலும் அவருக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.






இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் சிவகார்த்திகேயனே நேரடியாக டப்பிங் பேச இருப்பதால் தெலுங்கு மொழி பயிற்சிபெற்று விரைவாக தெலுங்கு கற்று வருகிறார். இப்படம் வெற்றியடையும் பட்சத்தில் சிவகார்த்திகேயன் மார்க்கெட் தெலுங்கு திரையுலகத்திலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News