தமிழ் திரையுலகை புகழ்ந்து தள்ளிய கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் !

Update: 2021-08-08 07:00 GMT

தமிழ் திரையுலகை கன்னட நடிகர் சிவராஜ்குமார் புகழ்ந்து பேசியுள்ளார்.




 


இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் பைராகி படத்தில் தற்போது நடித்து வருகிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சிவராஜ்குமார் கூறியதாவது, "நான் தமிழ் சினிமாவின் தீவிர ரசிகன். தொடர்ந்து தமிழ் திரையுலகை கவனித்து வருகிறேன். அங்கு வெளியாகும் அனைத்து படங்களையுமே, உடனடியாக பார்த்து விடுவேன். கமல் சாரின் தீவிர ரசிகன். அவரின் படங்களை முதல் நாளில் பார்த்து விடுவேன். தற்போது நடிகர் தனுஷ் மிகச் சிறப்பான படங்களை செய்து வருகிறார்.




 


இயக்குநர் விஜய் மில்டனை பல காலமாக எனக்கு தெரியும். இப்படத்தின் கதையை அவர் கூறிய போது, படத்தில் அளவான எமோஷனில் அட்டகாசமான ஆக்சன் கலந்த ஒரு அற்புதமான கதை இருந்தது தெரிந்தது. எல்லா தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் கமர்ஷியல் படமாக இது இருக்கும். தமிழ் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணிபுரிவது எனக்கு எப்போதும் மிகவும் பிடித்த விசயம்" என அவர் கூறியுள்ளார்.


Source - Dinamalar cinema

Tags:    

Similar News