விஜயுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா - 'வாரிசு' படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு

விஜயுடன் வாரிசு படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைகிறார்.

Update: 2022-07-21 11:18 GMT

விஜயுடன் வாரிசு படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைகிறார்.




 

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் 'வாரிசு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பல பிரபல நடிகர்கள் இணைந்தாலும் தற்பொழுது நடிகர் எஸ்.ஜே சூர்யா இணைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாக வலம் வருகிறது.




 

குடும்பப் பின்னணி கொண்ட இப்படத்தில் விஜய் ஆப் டிசைனராக நடித்துள்ளார் என்ற தகவலும் தற்பொழுது பரவி வரும் நிலையில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிற செய்துள்ளது.

Similar News