ஹீரோ, வில்லன் என இரு கதாபாத்திரங்களில் நடிக்கும் பிரபல நடிகரின் மகன்.!
ஹீரோ, வில்லன் என இரு கதாபாத்திரங்களில் நடிக்கும் பிரபல நடிகரின் மகன்.!
தமிழ் சினிமாவில் 80,90களில் பிரபலமான நடிகராக இருந்தவர் கார்த்திக்.அவரின் மகன் வளர்ந்து வரும் நடிகரான கௌதம் கார்த்திக் ஹீரோ வில்லன் என இரண்டு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.அறிமுக இயக்குனர் தக்ஷிணாமூர்த்தி ராமர் என்பவர் இயக்கவுள்ள படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க உள்ளார்.
மதுரையை பின்புலமாகக் கொண்ட திரைப்படங்கள் பல வந்திருந்தாலும் இந்த படம் முற்றிலும் வித்தியாசமானது என்று இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிக்க இருக்கும் கௌதமுக்கு இரண்டுமே கேரக்டர்களுமே வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகளே இல்லை என்றும் இருப்பினும் பிரபல நடிகை ஒருவர் வலிமையான கேரக்டர் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் அது மட்டுமின்றி 80-களில் ஹீரோவாக இருந்த ஒருவரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.இதுபற்றி முழுமையான தகவல்கள் சில நாட்களில் வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.