சோனுசூட்டுக்காக மக்கள் செய்த செயல் உற்சாகத்தில் சோனு சூட்..!
சோனுசூட்டுக்காக மக்கள் செய்த செயல் உற்சாகத்தில் சோனு சூட்..!;
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் சோனுசூட். இவர் சினிமாவில் வில்லனாக இருந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
அந்த வகையில் கொரோனா காலகட்டங்களில் நாடு முழுவதும் ஊரடங்கு விதிமுறைகள் அமலில் இருந்தபோது, போக்குவரத்து எதுவும் இன்றி புலம்பெயர் தொழிலாளர்கள் பலர், தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
அப்போது நடிகர் சோனு சூட், தனது சொந்த செலவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பத்திரமாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். வேலையிழந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.மேலும் விவசாயம் புரிய வசதியின்றி சொந்த மகள்களை வைத்தே நிலத்தை உழுத விவசாயிக்கு டிராக்டர் ஒன்றை அனுப்பி வைத்தார். செல்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளாமல் இருந்த ஏழை மாணவர்களுக்கு செல்போன்களை வாங்கி அனுப்பி வைத்தார். நெட்வொர்க் வசதி இல்லாமல் இருந்த ஒரு மலைக் கிராமத்திற்கு சொந்தமாக ஒரு செல்போன் டவரையே உருவாக்கி கொடுத்தார். இவர் மக்களுக்கு செய்த உதவிகளை சொல்ல வார்த்தையே இல்லை.அதனால் மனித நேயத்தைப் பாராட்டி மகிழும் விதமாக ஆந்திராவில் உள்ள ஒரு கல்லூரி நிர்வாகம், அங்குள்ள ஒரு துறைக்கு நடிகர் சோனுசூட்டின் பெயரை வைத்து இருக்கிறது. இதை அறிந்த சோனு சூட் அவர்களுக்கு இது எனக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.