ரசிகர்காக சோனு சூட் செய்த செயல்: குவியும் பாராட்டுக்கள்!
ரசிகர்காக சோனு சூட் செய்த செயல்: குவியும் பாராட்டுக்கள்!;
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானாலும் நிஜவாழ்க்கையில் மக்கள் மனதில் ஹீரோவாக சமீபகாலமாக பதிவு செய்யப்பட்டவர் நடிகர் சோனு சூட் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சோனுசூட் தனது ரசிகர் ஒருவரின் சாலையோர ஓட்டலுக்கு திடீர் விசிட் அடித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவியது மட்டுமின்றி பல்வேறு உதவிகளை செய்து மக்களின் மனதில் ரியல் ஹீரோ என்ற பட்டத்தை வென்றவர் நடிகர் சோனு சூட் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சோனு சூட் அவர்களுக்கு சிலை வைத்து கடவுள் போல் வணங்கப்படுவதில் இருந்து அவர் எந்த அளவுக்கு மக்களின் மனதில் உள்ளார் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள பேகும்பெட் என்ற பகுதியில் தனது ரசிகர் அனில் என்பவர் சாலையோர ஓட்டல் வைத்திருக்கிறார் என்பதை அறிந்ததும் திடீரென அந்த கடைக்கு விசிட் செய்து அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார் சோனுசூட்.
மேலும் அவர் உணவு சமைப்பதில் உதவி செய்ததோடு அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அது மட்டுமின்றி அவருடைய ஓட்டலில் தயாரான உணவையும் சாப்பிட்டு மிக அருமையாக இருப்பதாகவும் அவர் வாழ்த்து கூறினார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல பெரிய நடிகர்கள் ரசிகர்கள் தன்னை நெருங்க விடாமல் விலகி இருக்கும் நிலையில் ரசிகரின் உணவகத்திற்கு திடீர் விசிட் அடித்து அவருடைய உணவகத்திலும் சாப்பிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த சோனுசூட் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.