சௌந்தர்யா பயோபிக்கில் ராஷ்மிகா நடிக்கிறாரா ?

Cinema News.;

twitter-grey
Update: 2021-09-17 02:45 GMT
சௌந்தர்யா பயோபிக்கில் ராஷ்மிகா நடிக்கிறாரா ?

மறைந்த நடிகை சௌந்தர்யா பயோபிக்'ல் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா விருப்பம் தெரிவித்துள்ளார்.




 


தென்னிந்திய மொழிகளில் 90'களில் பிரபலமான நடிகை சௌந்தர்யா, தமிழில் 'அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா, தவசி, இவன்' உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்திருக்கிறார். 2004'ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இவரின் வாழ்க்கையை படமாக்கினால் அதில் நடிக்க வேண்டும் என ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.




 


சமீபத்திய பேட்டி ஒன்றில் இது பற்றி கூறிய அவர், "சிறு வயதிலிருந்தே என்னைப் பார்த்து சவுந்தர்யா போல இருப்பதாக அப்பா சொல்வார். அதனால், அவர் மீது எனக்கு சிறு வயது முதலே அதிக ப்ரியம் உண்டு. அவரது பயோபிக்கில் நடிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது," என்றும் தெரிவித்திருக்கிறார்.

Tags:    

Similar News