தெறிக்கும் விஜய் 67 அப்டேட்கள்

லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் படத்தை எடுத்த பிறகு தற்போது விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்கி வருகிறார்.

Update: 2023-01-26 12:14 GMT

லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் படத்தை எடுத்த பிறகு தற்போது விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்கி வருகிறார். விஜயுடன் இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஸ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய விக்ரம் படத்தில் முந்தைய படங்களின் கேரக்டர்கள் இடம்பெற செய்தார்.

அதேபோன்று தற்போது விஜய்யின் 67வது படத்திலும் கைதி படத்தில் இதற்கு முன்பு கார்த்தியை வைத்து இயக்கியதால் டில்லி கேரக்டரை சிறப்பு தோற்றத்தில் இடம் பெறச் செய்ய போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நடிகர் கார்த்தியிடம் சர்தார் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கேட்ட கேள்விக்கு அதைப்பற்றி லோகேஷ் கனகராஜ் இடத்தில் தான் கேட்க வேண்டும் என்னால் எந்த பதிலும் சொல்ல முடியாது என்று கூறியிருந்தார்.

விஜயின் 67ஆவது படத்தில் தற்போது டெல்லி கேரக்டர் படத்தில் இடம் பெற போவதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

Similar News