பாகுபலி பட நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்!

பாகுபலி பட நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்!;

Update: 2021-01-28 18:45 GMT

உலகநாயகன் கமலஹாசன் முதல் மகளான ஸ்ருதிஹாசன்  இன்று அவருடைய 35-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில்  திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவரின் பிறந்த நாள் பரிசாக பாகுபலி படத்தின் கதாநாயகன் பிரபாஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது.

இந்த படத்திற்கு 'சலார்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பவர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அந்தவகையில் இந்த பிரம்மாண்ட படத்தின்  பிரபாஸுக்கு கதாநாயகியாக  நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது.

இந்த தகவலை நடிகர் பிரபாஸ் அவர் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு கூறியவை:ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடிக்கவிருப்பதை தான் மிகவும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  இதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களையும்,  இந்த ட்விட்டின் பதிவையும் வைரலாகி வருகின்றனர்.

Similar News