'ஸ்டார்' படத்தில் ஹரிஷ் கல்யானுக்கு பதில் தனுஷா?
ரஜினி, கமல், ஷாருக்கான் ஆகியோரின் கெட்-அப்பில் ஹரிஷ் கல்யாண் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
'ஸ்டார்' படத்திலிருந்து மாற்றப்பட்ட ஹரிஷ் கல்யான்.
இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் பியார்! பிரேமா! காதல்!, தாராள பிரபு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவை அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' என்ற திரைப்படம் தயாராவதாக கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. அதோடு அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினி, கமல், ஷாருக்கான் ஆகியோரின் கெட்-அப்பில் ஹரிஷ் கல்யாண் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இதனையடுத்து ஹரிஷ் கல்யாண் நடிக்க இருந்த 'ஸ்டார்' படம் கைவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதே கதையில் ஹரிஷ் கல்யாணுக்கு பதிலாக தனுஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.