ஸ்டன்ட் இயக்குனர்: 'தளபதி 65' படம் வந்ததும் கே.ஜி.எஃப் படத்தை மறந்துருவிங்க!

ஸ்டன்ட் இயக்குனர்: 'தளபதி 65' படம் வந்ததும் கே.ஜி.எஃப் படத்தை மறந்துருவிங்க!;

Update: 2021-02-24 17:22 GMT

தளபதி விஜய் மாஸ்டர் படத்திற்கு அடுத்து  நடிக்கவிருக்கும் படம் தளபதி 65. இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார் எனவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்தது.அந்த வகையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் பூஜா ஹெக்டே இவர்கள் இருவரில் ஒருவர் நடிக்க இருப்பதாகவும், வில்லன் கதாபாத்திரத்தில் நவாசுதீன் சித்திக் நடிக்கவுள்ளதாகவும் அவ்வப்போது  தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக 'கேஜிஎப்' படத்தில் சிறப்பாக ஸ்டண்ட் அமைத்ததற்காக தேசிய விருதைப் பெற்ற அன்பறிவ் என்ற இரட்டையர்கள் பணிபுரிய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இவர்கள் இருவரும் பல படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 

எனவே அன்பறிவ் ஸ்டண்ட் குழுவில் உள்ள ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அடுத்த வருடம் நீங்கள் கேஜிஎப் ஸ்டண்ட் காட்சிகளை மறந்து விடுவீர்கள் என்றும் தளபதி 65 சண்டைக் காட்சிகள் மட்டுமே பேசுவீர்கள் என்று கூறியுள்ளது தளபதி ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இவர் பேசிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News