சேவை செய்வதாக நடிப்பிலிருந்து விலகிய சிம்பு பட நடிகைக்கு திடீர் திருமணம் - வைரலாகும் வீடியோ.!

சேவை செய்வதாக நடிப்பிலிருந்து விலகிய சிம்பு பட நடிகைக்கு திடீர் திருமணம் - வைரலாகும் வீடியோ.!;

Update: 2020-11-22 18:44 GMT

தமிழ் சினிமாவில் சிம்பு நடித்த சிலம்பாட்டம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சனாகான். அதன் பிறகு  ஆயிரம் விளக்கு, பயணம்,  தம்பிக்கு இந்த ஊரு, விஷால் நடித்த அயோக்கியா ஆகிய படங்களில் நடித்து மக்களுக்கு பிரபலமானவர்.தமிழ் மட்டுமல்லாமல் இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சினிமாவில் இருந்துதான் விலகப் போவதாகவும் கடவுளின் ஆணைக்கிணங்க சேவை செய்யப் போவதாகவும்  சமூக வலைத்தளங்கள் அவர் கூறியிருந்தார். 

அந்த வகையில் தற்போது இவர் திடீர் திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் சனாகான் அவரது கணவருடன் மாடியில் இருந்து இறங்கி வரும் காட்சிகளும், இருவரும் கேக் வெட்டும் காட்சிகளும் உள்ளன.

தற்போது சனாகான் சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக  பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.ஆனால்  இவருக்கு எப்பொழுது திருமணம் ஆனது என்ற தகவல்  வெளியாகமல் இருக்கிறது.

Similar News