இளையராஜா ஸ்டுடியோ வழக்கில் திடீர் திருப்பம் - ஏன்?

இளையராஜா ஸ்டுடியோ வழக்கில் திடீர் திருப்பம் - ஏன்?

Update: 2020-12-23 17:03 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர் இளையராஜா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை இருந்து வரும் சென்னை ஐகோர்ட்டில் இதுகுறித்த வழக்கும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் புதிய மனு ஒன்றை சமீபத்தில் இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அவருடைய மனுவில் பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது பொருட்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் ஒரே ஒரு நாள் அந்த இடத்தில் தான் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.


 

இந்த மனு குறித்து விசாரணை சமீபத்தில் நடைபெற்றபோது பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தை கேட்டு பதில் அளிப்பதாக பிரசாத் ஸ்டுடியோ வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஒரு சில நிபந்தனைகளுடன் இளையராஜாவுக்கு தியானம் செய்ய பிரசாத் ஸ்டூடியோ அனுமதி அளித்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும் இளையராஜா தனது உதவியாளர் மற்றும் வழக்கறிஞருடன் வந்து தியானம் செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து இருந்ததாகவும் தெரிகிறது.இந்த நிலையில் திடீரென இந்த வழக்கில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிரசாத் ஸ்டுடியோ விவகாரத்தில் அவரது வழக்கை வாபஸ் பெறுவதாக இசைஞானி இளையராஜா அறிவித்துள்ளார். 

மேலும் பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் உரிமை கோர மாட்டேன் என்று இளையராஜா கூறியுள்ளார். பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தமது பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திடீரென இசைஞானி வாபஸ் பெற்றுள்ளது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியாத நிலையில் அவரது ரசிகர்களும் சினிமா வட்டாரங்களும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

Similar News