'சக்ரா' பட தடை உத்தரவில் திடீர் திருப்பம்: விஷாலின் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்.!

'சக்ரா' பட தடை உத்தரவில் திடீர் திருப்பம்: விஷாலின் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்.!;

Update: 2021-02-18 17:41 GMT

விஷால் நடித்து தற்போது வெளிவரவிருக்கும் படம் சக்ரா. இந்த படத்தின் மேல் டிரைடண்ட் ஆர்ட்ஸ் தொடர்ந்த வழக்கில் நேற்று காப்பீட்டு உரிமை விவகாரத்தின் அடிப்படையில் சக்ரா திரைப்படம் வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த தடையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளதால் விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே தற்போது வந்த தகவலின் படி சக்ரா படத்திற்கு நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால தடை நீக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாளை பிப்ரவரி 19ம் தேதி திட்டமிட்டபடி திரையரங்குகளில் சக்ரா திரைப்படம் வெளியாகும் என நடிகர் விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தில் விஷால், சாரதா ஸ்ரீநாத், ரெஜினா சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா, கே.ஆர்.விஜயா என பல முக்கிய கதாபாத்திரங்களும் நடித்துள்ளனர்.

Similar News