#BigBoss4 திடீரென கமலஹாசன் கூறிய வார்த்தை: பதற்றத்தில் போட்டியாளர்கள் ஏன் தெரியுமா?

#BigBoss4 திடீரென கமலஹாசன் கூறிய வார்த்தை: பதற்றத்தில் போட்டியாளர்கள் ஏன் தெரியுமா?;

Update: 2021-01-17 17:52 GMT
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று மாலை ஃபினாலே டாஸ்க் நடைபெறும் நிலையில் 6 மணிநேர நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அந்தவகையில் நிகழ்ச்சியின் இறுதியில் டைட்டில் வின்னர் யார் என்பது அறிவிக்கப்படும் என்பது அறிந்ததே. இந்த நிலையில் சற்று முன் வெளியான  ப்ரோமோவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற 5 பேர்களையும் படபடக்க வைக்கும் வகையில் கமல்ஹாசன் கூறுகிறார்.

அவர் கூறியபோது, 5 வெற்றியாளர்கள் நாடி படபடக்க காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அதில் ஒரு வெற்றியாளர் யார் என்பதை நான் வைத்திருக்கின்றேன். உங்களை இன்னும் படபடப்பாக காட்டுவதில் ஒரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. அதை செய்யாமல் இருக்க முடியாது என்று சிரித்துக்கொண்டே கமலஹாசன் கூறுவதிலிருந்து 5 போட்டியாளர்களை படபடக்க வைக்க அவர் ஏதோ பெரிதாக செய்யப்போகிறார் என்று தெரிகிறது.

இன்றைய 6 மணி நேர நிகழ்ச்சியை ஓட்டுவதற்கு பல்வேறு யுக்திகளை பிக்பாஸ் குழுவினர் செய்து இருப்பார்கள் என்றும் அனைத்தும் சுவராசியமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுவரை நடந்த மூன்று சீசன்களில் வெற்றியாளர் யார் என்பது கடைசிவரை தெரியாமல் இருந்தது ஒரு திரில்லான அனுபவமாக இருந்தது என்பதும் ஆனால் இந்த சீசனில் ஆரி வெற்றியாளர் என்பது 99% தெரிந்துவிட்டதால் அந்த த்ரில் மிஸ்ஸிங் என்பது மட்டும் குறிப்பிடத்தக்கது.

Similar News