விஷால் பற்றி விசாரித்த விஜய் - என்ன சொன்னார் தெரியுமா?
விஷாலின் காயங்கள் பற்றி விஜய் விசாரித்ததாக சுனைனா சுவாரஸ்ய தகவல் கூறியுள்ளார்.
விஷாலின் காயங்கள் பற்றி விஜய் விசாரித்ததாக சுனைனா சுவாரஸ்ய தகவல் கூறியுள்ளார்.
அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி படம் 'லத்தி'. இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது அதில் படக் குழுவினர் கலந்து கொண்டு பேசினார்கள்.
அப்போது அதில் கலந்து கொண்டு பேசிய படத்தின் நாயகி சுனைனா, விஜய் பற்றிய சுவாரசிய தகவல் ஒன்று கூறினார். படத்தின் விழாவில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் பொழுது விமானத்தில் அருகில் விஜய் இருந்ததாகவும், அவர் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு லத்தி இசை வெளியீட்டு விழா சொல்கிறேன் என கூறியதும் படம் குறித்த விஷால் குறித்தும் விசாரித்தார் விஷாலுக்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட காயங்கள் குறித்தும் தெரிந்து கொண்டார்' என கூறியுள்ளார்