சூப்பர் ஸ்டார் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த சுனில் - பரபரக்கும் காஸ்டிங்
இயக்குனர் நெல்சன் திலிக்குமார் விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கிய பிறகு தற்போது ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இயக்குனர் நெல்சன் திலிக்குமார் விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கிய பிறகு தற்போது ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு என ஏற்கனவே ரஜினி படங்களில் நடித்தவர்கள் மீண்டும் இடம்பெற்றுள்ளனர் மேலும் இப்படம் ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்கள் மையப்படுத்தி உருவாகி வருகிறது.
சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லால் ஒரு கெஸ்ட் ரோலிங் நடிப்பதற்காக இப்படத்தில் இணைந்தார். ஐதராபாத்தில் ரஜினியும் இவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. மேலும் ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக முக்கிய வேடத்தில் கன்னடத்துறை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிவராஜ்குமார் நடித்து வருகிறார்.
தெலுங்கு திரை உலகில் நகைச்சுவை நடிகரான சுனில் புஷ்பா படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். இவரும் இந்த படத்தில் இன்னொரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். தற்போது நடிகர் சுனில் ரஜினிகாந்த் உடன் இந்த படத்தில் இணைந்து நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் இப்படி மூன்று மொழிகளைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் இடம் பெற்றிருப்பது பான் இந்தியா படமாக இந்த படம் ரிலீஸ் ஆகும்போது மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.