கதாநாயகியாக தமிழில் நுழையும் சன்னி லியோனி.!
ஏற்கெனவே தமிழில் வடகறி படத்தில் ஜெய்யுடன் சன்னி லியோனி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.;
இயக்குநர் யுவன் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனி நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு வெளியான 'சிந்தனை செய்' படத்தை இயக்கினார் யுவன். அப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
விமர்சனம் ரீதியாக நல்ல மதிப்பெண்களை குவித்தது. அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது என்று சொல்லலாம். தற்போதுவரை அப்படத்தின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தற்போது யுவன் தமிழில் மீண்டும் புதிய படத்தை தயாரிக்க உள்ளார். அப்படத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதனால் அப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏற்கெனவே தமிழில் வடகறி படத்தில் ஜெய்யுடன் சன்னி லியோனி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.