நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை வழங்கினார் துணை குடியரசுத்தலைவர்!
மத்திய அரசு வழங்கும் தாதா சாகேப் பால்கே விருது இன்று டெல்லியில் துணை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
மத்திய அரசு வழங்கும் தாதா சாகேப் பால்கே விருது இன்று டெல்லியில் துணை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் இன்று (அக்டோபர் 25) நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய விழா இன்று நடந்தது. இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கி வருகிறார். அப்போது மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
சிறந்த தமிழ் படத்திற்கான விருதினை அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறன், தயாரிப்பாளர் எஸ்.தாணு பெற்றனர். சிறந்த நடிகர் விருதினை அசுரன் படத்திற்காக தனுஷ் பெற்றார். அதே போன்று சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய்சேதுபதியும், சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதினை கே.டி.கருப்பு படத்தில் நடித்த நாக விஷாலும், சிறந்த இசையமைப்பாளர் விருதை அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்காக டி.இமான் பெற்றார்.
Source: Dinamalar
Image Courtesy: ANI