இளையராஜா இசையை கைதட்டி ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
இளையராஜாவுடன் நடிகர் ரஜினிகாந்த் சில நிமிடங்கள் சந்தித்த புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.
இளையராஜாவுடன் நடிகர் ரஜினிகாந்த் சில நிமிடங்கள் சந்தித்த புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.
வரும் ஜூன் 3ம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு இளையராஜா கோவை கொடிசியா வளாகத்தில் மிகப்பெரும் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இசையமைப்பாளர் இளையராஜாவின் நேற்று காலை சந்தித்து பேசியுள்ளார் மேலும் இசை நிகழ்ச்சி நடக்கும் ரிகர்சல் நிகழ்ச்சியை பார்த்த ரஜினிகாந்த் கைதட்டி ரசித்து பாராட்டியுள்ளார்.
சில பாடல்களை உட்கார்ந்து ரசித்து கேட்டுக் கொண்டிருந்த ரஜினிகாந்த் கை தட்டி ரசித்தது மட்டுமல்லாமல் இளையராஜாவிடும் சில நேரம் பேசிக்கொண்டிருந்து சென்றது குறிப்பிடத்தக்கது.