படமாகிறது ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு, அதுவும் இந்த நடிகரின் நடிப்பில்..

படமாகிறது ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு, அதுவும் இந்த நடிகரின் நடிப்பில்..

Update: 2020-11-07 17:04 GMT

தமிழ் சினிமாவில் தற்போது பிரபலங்கள், சாதனையாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுகிறது. அந்த வகையில்  மறைந்த ஜெயலலிதா அம்மாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் கங்கணா ரணாவத் நடித்து வருகிறார்.மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் சரோஜாதேவி அம்மா கதாபாத்திரத்தில் நடித்து விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னிலையில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை உருவாக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் வேடத்தில் அவரது மருமகன் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இயக்குநர் லிங்குசாமி  ஏற்கனவே ஆனந்தம்,ரன் சண்டக்கோழி ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர். சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுக்க முடியாவிட்டாலும் அவரது வாழ்க்கை படத்தை எடுக்க முன்வந்திருக்கிறார்.
 

இந்நேரத்தில் ரஜினிகாந்த் வாழ்க்கை படத்தை படமாக எடுக்க ஒப்புக்கொண்டால் தனுஷ் அந்த படத்தில் நடிப்பது உறுதி என்றும் அறிவித்து இருக்கின்றனர். இந்த படத்தை பற்றிய தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று இயக்குனர் அறிவித்திருக்கிறார்.

Similar News