சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் ப்ரைமில் செய்த சாதனை: குவியும் வாழ்த்துக்கள்.!

சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் ப்ரைமில் செய்த சாதனை: குவியும் வாழ்த்துக்கள்.!;

Update: 2021-02-19 18:10 GMT

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில்  ஜிவி.பிரகாஷ் இசையில் வெளிவந்த படம் சூரரைப்போற்று. இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


 

அந்தவகையில் இப்படம் தியேட்டரில் வெளிவந்திருந்தால் அதிக வசூல் சாதனை செய்த படமாக இருந்திருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள், ரசிகர்கள் கூறி வந்தனர். இன்று இப்படம் வெளியாகி 100 நாட்கள் ஆன நிலையில் சூரரைப்போற்று படக்குழுவினர் இதை கொண்டாடி வருகின்றனர்.

எனவே தற்போது வந்த தகவலின்படி அமேசான் பிரைமில் இந்தியாவில் சூரரைப்போற்று திரைப்படம் ஒரு சூப்பர் சாதனையை செய்துள்ளது என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் பல மொழியில் மிக அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை செய்துள்ளது. இதை அறிந்த ரசிகர்கள்  இதனை வைரலாகி மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Similar News