பிறந்தநாளில் ப்ரியா பவானி சங்கருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்.!

பிறந்தநாளில் ப்ரியா பவானி சங்கருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்.!;

Update: 2020-12-31 16:21 GMT

தமிழ்சினிமாவில் சின்னத்திரையிலிருந்து  வெள்ளித்திரையில் கால்பதித்து அவரின் உழைப்பினால்  மிகப்பெரிய உச்சத்தை அடைந்து கொண்டிருப்பவர் ப்ரியா பவானிசங்கர். மேயாத மான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதன் பின் பல படங்களில் நடித்து தற்போது கமல்ஹாசனின்  'இந்தியன் 2' உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சமீபத்தில் அவர்  அடுத்த திரைப்படமான 'ருத்ரன்' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் 'ருத்ரன்' என்று சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை ஜீவி பிரகாஷ்  இசையமைப்பில் படத்தின் நாயகி பிரியா பவானிசங்கர் இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம் அவரது பிறந்த நாளில் கிடைத்த சர்ப்ரைஸ் ஆகவே கருதப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பொங்கல் முடிந்த உடன் நடைபெற இருப்பதாகவும் இந்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பு வெளிவரும் போது அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பொல்லாதவன் ஆடுகளம், ஜிகிர்தண்டா உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்த கதிரேசன் தயாரிக்கும் அடுத்த படமான 'ருத்ரன்' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இந்தப்படமும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இப்படத்தை பற்றிய முக்கிய அறிவிப்புகள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News