சிரஞ்சீவி ஆதரவை சூசகமாக வெளிப்படுத்திய பிரகாஷ்ராஜ் !

Cinema News.

Update: 2021-08-18 01:45 GMT

தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் சூடுபிடிக்கும் வேளையில் நடிகர் சிரஞ்சீவியை சந்தித்து 'அன்னைய்யா சிரஞ்சீவி' என புகழ்ந்துள்ளார் பிரகாஷ்ராஜ்.




 


தெலுங்கு நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தலில் தலைவர் பதவிக்காகப் போட்டியிடும் பிரகாஷ்ராஜு தெலுங்கு திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு கன்னடர் எப்படி தெலுங்கு நடிகர் சங்கத்நில் போட்டியிடலாம் என்று! இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பிரகாஷ்ராஜ் நடிகர் சிரஞ்சீவியின் ஆதரவில்தான் போட்டியிடுகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.




 


இந்நிலையில் நேற்று பிரகாஷ் ராஜ் ஜிம்மில் சிரஞ்சீவியைச் சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்து, "பாஸ்-ஐ அதிகாலையில் ஜிம்மில் சந்தித்தேன். திரையுலக ஒற்றுமைக்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மிக்க நன்றி. எப்போதும் ஊக்கமளிக்கும் அன்னையா (அண்ணன்), அவரைப் பெற்றதில் நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்," என்று பாராட்டித் தள்ளியுள்ளார். தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் விரைவில் நடக்கவிருக்கும் நிலையில் பிரகாஷ்ராஜ் இதுபோன்று பதிவிட்டிருப்பது சிரஞ்சீவியின் மறைமுக ஆதரவை வெளிப்படுத்துகிறாரோ என பலர் சந்தேக குரலை எழுப்பி வருகின்றனர்.

Tags:    

Similar News