ஆஸ்கர் விருதை நெருங்கிவிட்டதாக சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டம்.!

ஆஸ்கர் விருதை நெருங்கிவிட்டதாக சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டம்.!;

Update: 2021-02-26 18:46 GMT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் நடிகர் சூர்யா.இவர் நடித்த படங்களின் மூலம் அதிக ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு,நடிகை அபர்ணா பாலமுரளி உட்பட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்  இசையில் சூரரைப்போற்று திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  OTT-யில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆஸ்கார் விருதின் பொதுப்பிரிவுக்கு இந்த படம் தேர்வு செய்யப்பட்டது என்பதும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசை உள்பட ஒருசில பிரிவுகளுக்கு இந்த படம் போட்டி போட்டது என்பதும் தெரிந்ததே.  அந்தவகையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெற்ற 366 திரைப்படங்களில் ஒன்றாக 'சூரரைப்போற்று' தேர்வு செய்யப்பட்டுள்ளதால்   சூர்யாவின் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

Similar News