பிக்பாஸ் ரகசியத்தை உடைக்கும் சுஜி - அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்.!

பிக்பாஸ் ரகசியத்தை உடைக்கும் சுஜி - அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்.!;

Update: 2020-11-23 17:30 GMT

பிக்பாஸ் சீசன்4-ல் நேற்று குறைவான வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்ட சுஜி. பிக்பாஸ் ரகசியத்தை பற்றி ஒவ்வொன்றாக வெளிப்படுத்துகிறார். அதிலும் குறிப்பாக பாலாஜி,ஷிவானி காதல் குறித்து விளக்கம் அளிக்கிறார். மேலும் சுசி, அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் பாலாஜி-ஷிவானி காதல் குறித்து ஒரு மீம்ஸை பதிவு செய்து அதற்கு சூப்பர் என கமெண்ட் அளித்துள்ளார்.

கடந்த வார நாமினேஷனின்போது "காதல் கண்ணை மறைக்குது" என்று ஆரி சொல்ல, உடனே தனக்கு காதலும் இல்லை ஒன்றும் இல்லை என பாலாஜி ஒப்புக்கொண்டதை தான் சுசி சூப்பர் என குறிப்பிட்டிருந்தார். 

பாலாஜியே காதல் இல்லை என்று கூறியதை அடுத்து காதலின் ரகசியம் உடைந்ததாக கருதப்படுகிறது .மேலும் கமலிடம் சுசி பேசியபோது, ‘ரியோ, அர்ச்சனா, நிஷா ஆகியோர்களுக்கு இரண்டு முகம் உண்டு என்றும், ஒன்று கேமிரா முன், இன்னொன்று கேமிராவுக்கு பின் என்றும் அவர்களுடைய இரட்டை வேடத்தையும் தெளிவுபடுத்தினார்.இன்னும் அதிக தகவல்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Similar News