'புரட்சித்தலைவர்' பிறந்தநாளில் வெளியான 'தலைவி' பட புகைப்படங்கள் வைரல்!

'புரட்சித்தலைவர்' பிறந்தநாளில் வெளியான 'தலைவி' பட புகைப்படங்கள் வைரல்!;

Update: 2021-01-17 17:55 GMT
தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு சிறந்து விளங்குபவர்கள் என்றால் அது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மட்டுமே. அந்த வகையில் மக்கள் திலகம் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு அரசியல்வாதிகள் பொதுமக்கள் என அனைவரும் சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். 

இந்தநிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் இதில் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமியும், ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத்தும் நடித்து உள்ளார்கள். எனவே தலைவி படக்குழுவினர் சற்று முன் எம்ஜிஆர், ஜெயலலிதா கேரக்டர்களின் ரொமான்ஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

எம்ஜிஆர் வேடத்தில் நடித்த அரவிந்தசாமி மற்றும் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் கங்கனா ரணாவத் ஆகிய இருவரும் தோன்றும் இந்த ரொமான்ஸ் ஸ்டில் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த ஸ்டில் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News