10 தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் திரையுலகம்

2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதில் தமிழ் சினிமாவிற்கு 10விருதுகள் கிடைத்துள்ளது தமிழ் திரையுலகத்தினர் மத்தியில் மட்டுமல்லாத ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Update: 2022-07-23 09:08 GMT

2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதில் தமிழ் சினிமாவிற்கு 10விருதுகள் கிடைத்துள்ளது தமிழ் திரையுலகத்தினர் மத்தியில் மட்டுமல்லாத ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன இதில் தமிழ் சினிமாவிற்கு மட்டும் மொத்தம் 10 விருதுகள் கிடைத்துள்ளன, இதில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த 'சூரரை போற்று' திரைப்படம் 5 விருதுகளை பெற்றுள்ளது.

மேலும் இயக்குனர் வசந்த் இயக்கிய 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படம் மூன்று விருதுகளையும் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்த மண்டேலா படம் இரண்டு விருதுகளையும் வென்றுள்ளன. இதை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் தேசிய விருது கிடைத்தது பற்றி ஜி.வி.பிரகாஷ், சுதா கொங்கரா, அபர்ணா பாலமுரளி, யோகி பாபு ஆகியோர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.  

Similar News