பயிற்சியாளராக அண்ணாமலை - 'அரபி' படத்தின் கதை என்ன?

கன்னட படம் ஒன்றில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ளார் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-05-28 00:45 GMT

கன்னட படம் ஒன்றில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ளார் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 



கர்நாடகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக 10 ஆண்டுகள் பணியாற்றியவர் அண்ணாமலை, இவர் கரூர் மாவட்டத்தில் பிறந்தவர் தற்போது தமிழக பா.ஜ.க தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கன்னட படத்தில் ஒன்றில் அண்ணாமலை நடித்துள்ளதாக அதன் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.




'அரபி' என்ற படத்தில் இரு கைகளும் இல்லாமல் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளும் பல்வேறு சாதனைகளை செய்த நீச்சல் வீரர் விஷ்வாஸின் வாழ்க்கை வரலாறு கதையாக தயார் செய்து படமாக எடுத்துள்ளனர். இதில் விஷ்வாஸ் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்துள்ளார், இப்படத்திற்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கி அண்ணாமலை வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Similar News