விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் முதல்வர் ஸ்டாலின்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விளம்பரத்தில் நடிக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

Update: 2022-07-08 08:15 GMT

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விளம்பரத்தில் நடிக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக உருவாக்கப்படும் விளம்பர படத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடிக்க உள்ளார்.

இந்த மாத இறுதியில் மகாபலிபுரத்தில் செஸ் ஒலிம்பிக்காடு போட்டி நடைபெறுகிறது, இதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன, இந்த நிலையில் செஸ் ஒலிம்பிக் போட்டிக்கான விளம்பர படம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இடையில் வருவது போன்ற காட்சிகள் உள்ளன, அந்த படப்பிடிப்பில் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பு நேற்று சென்னை நேப்பியர் பாலத்தில் நடந்து முடிந்தது.

இந்த விளம்பர படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

Similar News