கேரளா ஸ்டோரி படத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்ன அந்த வார்த்தை - கதறும் இடதுசாரிகள்!
கேரளா ஸ்டோரி திரைப்படம் கொடூரத்தை அம்பலப்படுத்துவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து கூறியுள்ளார்.
கேரளா ஸ்டோரி திரைப்படம் கொடூரத்தை அம்பலப்படுத்துவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து கூறியுள்ளார்.
கேரளாவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை லவ் ஜிகாத் மூலமாக ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டிருப்பதாக கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் வாயிலாக வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது. இத்திரைப்படம் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில சக்திகள் இத்திரைப்படத்தை ஓடவிடாமல் மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தியேட்டர் உரிமையாளர்கள் கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட்டு ஒரு சில நாட்களில் எடுத்துவிட்டனர்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமியுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபோர் ஃப்ரேம்ஸ் திரையரங்கில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை நேற்று (மே 21) ஞாயிற்றுக்கிழமை பார்த்தார். இது பற்றி தனது ட்விட்டர் பதவில், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தைப் பார்த்தேன், ஒரு மெல்லிய, கொடூரமான எதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி’ என குறிப்பிட்டிருந்தார்.