சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!;

Update: 2021-02-02 18:01 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிம்பு. தற்போது உடல் எடையை குறைத்து பல படங்களில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் படம் மாநாடு.பல பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும்  படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர்  வெளியீட்டு தேதி  அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா, எஸ்ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர் என முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர். அந்த வகையில் வரும் 3-ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாள் வருவதை அடுத்து அன்றைய தினம் சிம்பு ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக 'மாநாடு' படத்தின் டீசர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது மாநாடு டீஸர் பிப்ரவரி 3-ஆம் தேதி 02.34 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதை எதிர்பார்த்து சிம்பு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.


 

Similar News