கார்த்தி நடிக்கும் 'சுல்தான்' படத்தின் 'டீசர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

கார்த்தி நடிக்கும் 'சுல்தான்' படத்தின் 'டீசர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

Update: 2021-01-30 17:46 GMT

நடிகர் கார்த்திக் தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற படத்தின் மூலம்  அறிமுகமாகி அதன்பின் பல படங்களில் நடித்தார். தற்போது சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின்  படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று தற்போது சூட்டிங் முடிவடைந்த நிலையில் டப்பிங் உள்பட பெரும்பாலான போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் முடிந்துள்ளன.

இந்நிலையில் இப்படத்தின் மாஸ் அறிவிப்பான சுல்தான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்ரீம்வாரியர்ஸ் டீசர் ரிலீஸ் குறித்து ஒரு மாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கார்த்திக் நடிக்கும் படத்தின் டீசர் வருகிற திங்கட்கிழமை பிப்வரி 1-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த கார்த்திக் ரசிகர்கள் அனைவரும் இப்பதிவை மகிழ்ச்சியுடன் வைரலாகி வருகின்றனர்.

சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' படத்தை  இயக்கிய பாக்யராஜ் கண்ணன்.மேலும் சுல்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News