கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் டீசர் வெளியீடு!

கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் டீசர் வெளியீடு!

Update: 2021-02-02 08:30 GMT

நடிகர் கார்த்திக் தற்போது நடித்து முடித்துள்ள படம் சுல்தான். படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளும்  ரசிகர்களின் ஆதரவும் குவிந்து வருகின்றனர்.

சுல்தான் படத்தின் டீசரில் உள்ளவை: மகாபாரதத்தில் கிருஷ்ணர் நூறு வாய்ப்பு கொடுத்து கெளரவர்கள் திருந்தவில்லை, நீ ஒரு வாய்ப்பு தானே கேட்கிறாய் தருகிறேன் என்று வில்லன் கூறுவதும் மகாபாரதத்தில் கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு பதிலாக கௌரவர் பக்கம் நின்று இருந்தால் நீங்கள் மகாபாரதத்தை போர் இல்லாமல் படித்து பாருங்கள்’ என்று அதே மகபாரத்தை வைத்து கார்த்தி பேசும் வசனமும் மாறி மாறி டீசரில்  இடம்பெற்றுள்ளனர்.


 

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.மேலும்  நெப்போலியன், லால், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்வில் உருவாகியுள்ள இந்த படத்தை எஸ்ஆர் பிரபு, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். மேலும் இந்த டீசரில் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதை அறிந்த கார்த்திக் ரசிகர்கள் ஆர்வமுடன் இந்த பதிவை வைரலாகி வருகின்றனர்.

Full View

Similar News