பிரபல மெட்டி ஒலி சீரியல் நடிகை உமா மகேஸ்வரி மரணம்!

பிரபல சீரியலான மெட்டி ஒலியில் நடித்த விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி இன்று காலமானார். கடந்த 2002ம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பு பெற்ற சீரியல் மெட்டி ஒலி ஆகும். அதன் டைட்டில் பாடலான ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடலை பெண்கள் அனைவராலும் மறக்க முடியாத ஒன்றாகும். அந்த அளவிற்கு மெட்டி ஒலி சீரியல் பெண்களிடையே பிரபலமடைந்தது.;

Update: 2021-10-17 10:45 GMT

பிரபல சீரியலான மெட்டி ஒலியில் நடித்த விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி இன்று காலமானார். கடந்த 2002ம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பு பெற்ற சீரியல் மெட்டி ஒலி ஆகும். அதன் டைட்டில் பாடலான 'அம்மி அம்மி அம்மி மிதித்து' என்ற பாடலை பெண்கள் அனைவராலும் மறக்க முடியாத ஒன்றாகும். அந்த அளவிற்கு மெட்டி ஒலி சீரியல் பெண்களிடையே பிரபலமடைந்தது.

இந்த சீரியலை இயக்கிய இயக்குனர் திருமுருகனே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் திருமுருகனுடன் டெல்லி குமார், வனஜா, உமா, ரோகா, சேத்தன், உமா மகேஸ்வரி, நீலிமா ராணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த சீரியல் இன்றுவரை பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் திருமுருகனின் ஜோடியாக நடித்தவர் விஜி என்ற உமா மகேஸ்வரி. இவருக்கு 40 வயதாகிறது. இவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவு சின்னத்திரை நடிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy:Daily Thanthi


Tags:    

Similar News