தல அஜித்தின் சைக்கிள் ரைட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல்!

தல அஜித்தின் சைக்கிள் ரைட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல்!;

Update: 2021-02-25 16:54 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், ரசிகர்கள் அனைவராலும் தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அஜீத். அந்தவகையில் தற்போது வலிமை படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் கூடிய விரைவில் ஒரு நற்செய்தி வரப்போகிறது என்று ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

எனவே தல அஜித் குறித்த செய்திகள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வந்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் கூட அஜித் துப்பாக்கி சுடும் புகைப்படங்கள் வைரலானது.மேலும் அடுத்ததாக அஜித் சைக்கிள் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வட இந்திய மாநிலங்களில் அஜித் சைக்கிள் ஓட்டும் காட்சிகள் இந்த புகைப்படத்தில் இருக்கின்றன.


இந்நிலையில் அஜித்துடன் சைக்கிளில் சென்ற ஒருவர் அவரது சமூக வலைத்தளத்தில் அஜீத்தின் சைக்கிள் ஓட்டும் திறனை பார்த்துதான் ஆச்சரியமடைந்ததாகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர் இந்த பயிற்சியில் ஈடுபட்டதாகவும் அவருடன் நாங்கள் சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிளில் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியம் அடைய வைத்த நிலையில் இப்புகைப்படங்கள் ரசிகர்கள் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

Similar News