அடுத்தபடியாக ஓ.டி.டி தளத்திற்கு தாவும் தல-தளபதி ரசிகர்கள் - ஓ.டி.டியில் ஒரே நாளில் வெளியாகும் துணிவு-வாரிசு

ஜனவரி 11ஆம் தேதி விஜய் நடித்த வாரிசு படமும் அஜித் நடித்த துணிவு படமும் தியேட்டர்களில் ஒரே நாளில் வெளியாகின.

Update: 2023-01-22 08:36 GMT

ஜனவரி 11ஆம் தேதி விஜய் நடித்த வாரிசு படமும் அஜித் நடித்த துணிவு படமும் தியேட்டர்களில் ஒரே நாளில் வெளியாகின. இந்த இரண்டு படங்களில் எந்த படம் அதிக வசூலை குவித்தது எந்த படம் லாபத்தை கொடுத்தது என்ற சண்டை படம் வெளியாகி 10 நாட்களாகியும் சமூக வலைத்தளங்களில் போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த இரண்டு படங்களுமே பிப்ரவரி 10ஆம் தேதி ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை தியேட்டர்களில் போட்டி வசூலில் போட்டி என சென்ற நிலையில் தற்போது இரண்டு படங்களுமே ஓ.டி.டி'யிலும் போட்டி போட உள்ளது.

வசூல் சண்டையே இன்னும் முடியாத நிலையில் அடுத்ததாக எந்த படம் ஓ.டி.டி தளத்தில் அதிக நேரம் பார்க்கப்படுகிறது என்று சண்டை அடுத்த மாதம் புதிதாக ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் ப்ரைம் தளத்தில் வாரிசு படமும் நெட்பளிக் தளத்தில் துணிவு படமும் வெளியாக உள்ளது. இரண்டுமே முன்னணி ஒ.டி.டி தலங்கள் என்பதால் ரசிகர்களால் அதிக அளவு பார்க்கும் விகிதத்தில் பரபரப்பு ஏற்படுத்துவார்கள்.

Similar News