மீதமுள்ள 32 லட்சம் வரியை செலுத்திவிட்டாரா தளபதி?
Does thalapathi paid the tax.
சொகுசு காருக்கு மீதமுள்ள 32 லட்சம் ரூபாயையும் முழுமையாக செலுத்திவிட்டாரா விஜய்?
நடிகர் விஜய், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 'ரோல்ஸ் ராய்ஸ்' காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனையடுத்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த ஜூலை 27-ந் தேதி, விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. தொடர்ந்து விஜய் செலுத்த வேண்டிய காருக்கான வரியை, வணிக வரித்துறை ஒரு வாரத்தில் கணக்கிட்டுச் சொல்ல வேண்டும், மீதமுள்ள 80 சதவீத வரித்தொகையை அடுத்த ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும்" எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து தற்போது மீதமுள்ள 32 லட்சம் ரூபாயையும் முழுமையாக செலுத்திவிட்டாராம் நடிகர் விஜய்.