செம போதையில் காரை ஒட்டி விபத்து ஏற்படுத்திய நடிகை - பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்
போதையில் ரகளை செய்த மலையாள நடிகை தனது காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதையில் ரகளை செய்த மலையாள நடிகை தனது காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையாள திரையுலகில் சினிமாவிலும் சின்னத்திரையிலும் நடித்து வருபவர் அஸ்வதி பாபு கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் இவர் மலையாள திரை உலகில் பரபரப்புக்கு பெயர் போனவர்.
மது போதைக்கு அடிமையான அஸ்வதி பாபு பலமுறை போதைப்பொருளுடன் போலீஸ் வேலை சிக்கி உள்ளார், இது தொடர்பான வழக்குகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தின மாலை தனது காதலனுடன் கொச்சின் நகருக்குள் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்த தாறுமாறாக சென்றது. இதனை கண்ட பொதுமக்கள் காரை துரத்திப் பிடிக்க முயன்றனர் அப்பொழுது கார் டயர் வெடித்து நின்றது. அதிலிருந்து அஸ்வதியும், காதலனும் இறங்கி தலைமறைவானார்கள் விரைந்து வந்த போலீசார் மறைந்திருந்த இருவரையும் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். இருவரும் போதையில் இருந்த காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டது என தெரிய வந்துள்ளது.