கம்பெனி ஆர்டிஸ்ட்ங்களை பாதுகாப்பதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியா - கஸ்தூரி ஆவேசம்.!
கம்பெனி ஆர்டிஸ்ட்ங்களை பாதுகாப்பதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியா - கஸ்தூரி ஆவேசம்.!;
தமிழ் நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி அவரது சமூக வலைத்தளத்தில் பிக்பாஸ் பற்றி விளாசியுள்ளார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சனம் ஷெட்டி வெளியேறியது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
ஆரம்ப நாள் முதல் இன்றுவரை மிக்சர் மட்டுமே சாப்பிட்டு கொண்டு எந்தவித கண்டெண்டும் கொடுக்காத போட்டியாளர்கள் சிலர் உள்ளே இருக்கும் போது ஒவ்வொரு நிகழ்வுக்கும் தன்னுடைய கருத்தை தைரியத்துடன் முன் வந்த சனம்ஷெட்டி வெளியேற்றப்படுவது நியாயம் இல்லாத ஒன்று என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சனம்ஷெட்டி எவிக்ட் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டவுடன் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: நியாயமான நேர்மையான முறையில் மக்கள் வாக்குகளை மட்டுமே நம்பி விளையாடப்படும் ஒரு கேம் என்று இன்னும் நம்புபவர்கள் மேடைக்கு வரவும்.
மிக்ஸ்ச்சர் பார்ட்டிகளையும் கம்பெனி ஆர்டிஸ்ட்ங்களையும் பாதுகாத்து மத்தவங்களுக்கு கல்தா குடுக்கறதுக்கு பேரு என்ன தெரியுமா என்று பதிவு செய்துள்ளார்.ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கடுமையாக அவர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதற்கு சம்பளம் கூட தரவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது.