போலி பாதிரியார்களை அம்பலப்படுத்தும் 'நிலை மறந்தவன்'

மலையாளத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்ற 'ட்ரான்ஸ்' படம் தமிழில் நிலை மறந்தவன் என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.

Update: 2022-07-12 08:51 GMT

மலையாளத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்ற 'ட்ரான்ஸ்' படம் தமிழில் நிலை மறந்தவன் என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.





மதத்தை வைத்து வியாபாரம் நடத்தி மக்களை ஏமாற்றி பிழைக்கும் போலி பாதிரியார்களும், அவர்கள் பின்னால் மறைந்து இயக்கும் நெட்வொர்க்கையும் அற்புதமாக விளக்கம் படம் 'ட்ரான்ஸ்', இந்த படத்தின் கதைக்களம் கன்னியாகுமரியில் துவங்கிய அப்படியே மும்பை, கொச்சி என விறுவிறுப்பாக பயணம் செய்யும்.


 



இப்படம் தமிழில் வெளியாக வேண்டும் என பல ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், 'ட்ரான்ஸ்' படம் தமிழில் 'நிலை மறந்தவன்' என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. இப்படம் ஜூலை 15ஆம் தேதி தமிழில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் தற்பொழுது நடந்துவருகின்றன. 

Similar News