கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்!
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார் 46, கடந்த 29ம் தேதி பெங்களூருவில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், பார்வதம்மா தம்பதியின் இளைய மகன் ஆவார். புனித் மரணம் அவர்களின் குடும்பத்தாரிடம் மட்டுமின்றி ரசிகர்களிடையேயும், திரைத்துறையை சேர்ந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார் 46, கடந்த 29ம் தேதி பெங்களூருவில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், பார்வதம்மா தம்பதியின் இளைய மகன் ஆவார். புனித் மரணம் அவர்களின் குடும்பத்தாரிடம் மட்டுமின்றி ரசிகர்களிடையேயும், திரைத்துறையை சேர்ந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், இந்திய திரை உலகினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். திடீரென்று மறைந்த சம்பவம் அனைவரிடத்திலும் ஒருவிதமாக அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அமைந்துள்ளது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கர்நாடக ஆளுநர் கெலாட் மற்றும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இரங்கலை தெரிவித்தனர்.
புனித் ராஜ்குமார் மாரடைப்பால் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிரிழந்தார். அதிகாரப்பூர்வமாக கடந்த 29ம் தேதி மதியம் 2.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பெங்களூரு நகர் முழுவதும் பாதுகாப்பு காரணங்களுக்காக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சதாசிவநகரில் உள்ள வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு 4 மணி நேரம் வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் இரவு 7 மணிக்கு புனித் ராஜ்குமாரின் உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கன்டீரவா மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் உடல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து மிக நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மாநிலத்தின் பிற மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்களில் இருந்தும் ரசிகர்கள் பெங்களூருவை நோக்கி படையெடுத்து வந்தனர். மைதானம் வெளியில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரசிகர்கள் காத்திருந்தனர். மைதானம் வெளியில் அடைக்கடலென மக்கள் கூட்டம் அலைமோதியது. சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர். மழை, மற்றும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய, விடிய பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். வந்தவர்கள் அனைவரும் அப்பு.. அண்ணா என்று கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினர். தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்ததை பார்த்து பலரும் கண்ணீர் விட்டனர்.