மாஸ்டர் படம் எப்படி இருக்கு என்ற தகவலை அளித்த காமெடி நடிகர்!

மாஸ்டர் படம் எப்படி இருக்கு என்ற தகவலை அளித்த காமெடி நடிகர்!;

Update: 2021-01-13 17:01 GMT

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் காமெடி நடிகர் சூரி. இவர் வெண்ணிலா கபடிக்குழு என்ற படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பிரபலமானவர்.அந்தவகையில் தளபதி விஜய் நடித்து இன்று வெளியான மாஸ்டர் படம் பற்றிய முக்கிய தகவலை கொடுத்திருக்கிறார். எனவே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து உள்ளார். தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருக்கிறார்.

இன்று காலை 4 மணிக்கே இந்தப் படத்தின் முதல் காட்சி வெளியாகி அதன் விமர்சனங்களும் தற்போது பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல இடங்களில் ரசிர்கள் மாஸ்டர் பட போஸ்ட்டுக்கு பால் அபிஷேகம் மற்றும் கோகோகோலா அபிஷேகம் என அல்ட்ராசிட்டி காட்டி வருகின்றனர். திரை விமர்சகர்களும் இந்தப் படத்துக்கு நல்ல கமெண்ட் கொடுத்து வருகின்றனர். மேலும் ரசிகர்களிடம் காணப்படுகின்ற வரவேற்பை பார்க்கும்போது படம் பட்டையை கிளப்பப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் மாஸ்டர் படத்தை மதுரையில் உள்ள ஒரு தியேட்டரில் முதல் ஷோவாகப் பார்த்த நடிகர் சூரி அவருடைய கருத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டு உள்ளார்.

அதில், படம் நன்றாக இருக்கிறது என்றும் விஜய்யும், விஜய் சேதுபதியும் கலக்கி இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றும் தெரிவித்து உள்ளார்.தமிழ் ரசிகர்கள் 9 மாதங்களுக்கு பிறகு இந்தப் படத்தை முதன் முதலாக திரையில் பார்த்து ரசிக்கின்றனர். அதேபோல கேரளாவிலும் இந்தப் படம் பல மாதங்களுக்கு பிறகு நாளை திரைக்கு வரவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News