ஆரியை அடுத்த வாரமும் நாமினேட் செய்வேன் பளிச்சென்று கூறிய போட்டியாளர்!

ஆரியை அடுத்த வாரமும் நாமினேட் செய்வேன் பளிச்சென்று கூறிய போட்டியாளர்!;

Update: 2020-12-21 17:01 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு மாதங்களுக்கு மேலாக ஒவ்வொரு போட்டியாளர்களும் அவர்களது தனி திறமை காட்டி வருகின்றனர்.அந்த வகையில்  கடந்த வாரம் நடந்த கோழி-நரி டாஸ்க் போட்டியாளர்களுக்கு இடையே பெரும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து கமல்ஹாசன் முன்னிலையில் கோழி யார், நரி யார், என்று தேர்வு செய்யப்பட்டது.எனவே இந்த வாரமும் போட்டியாளர்களுக்கு சர்ச்சைக்குரிய டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் கொடுக்கிறார். 'மாட்னியா' என்ற இந்த டாஸ்க்கில் ஒரு ஹவுஸ்மேட், இன்னொரு ஹவுஸ்மேட்டை அழைத்து அவரது கையை குறிவைத்து அடிக்க வேண்டும். 

அவ்வாறு அடித்து விட்ட ஹவுஸ்மேட் ஒரு சீட்டை எடுக்க வேண்டும். அந்த சீட்டில் என்ன வார்த்தை உள்ளதோ அதற்கு ஏற்ப அந்த ஹவுஸ்மேட் ஒரு கேள்வி கேட்கலாம் என்பதும், அவர் என்ன கேள்வி வேண்டுமென்றாலும் கேட்கலாம் என்பதும் விதி.

இந்த டாஸ்க்கில் ரம்யாவின் கையை அடித்துவிட்ட ஆரி அவரிடம் கேள்வி கேட்டபோது 'அடுத்த வாரம் நீங்கள் நாமினேட் செய்யும் இருவர் யார் யார்' எனக் கேட்க அதற்கு ரம்யா, 'ஆரி, கேபி' என பதிலளிக்கின்றார். இந்த வாரமும் ரம்யா இதே இருவரைத்தான் நாமினேட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஆரியிடம் பாலாஜி கேள்வி கேட்டபோது நீங்கள் பைனலுக்கு வந்துவிட்டீர்கள், உங்களுடன் இருக்கும் 3 போட்டியாளர்கள் யாராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்க உடனே ரியோ எழுந்து ஐயா உண்மையான நரி இவருதாங்க என்று பாலாஜியை பார்த்து பிக்பாஸிடம் புகார் கூறுவது போல் சொல்வதுடன் இன்றைய  ப்ரோமோ முடிந்தது.


 

null


 

Similar News