வலிமை பட அப்டேட்டை அஜித்தை நேரில் சந்தித்து கேட்ட ரசிகர்: தல கூறிய பதில்.?

வலிமை பட அப்டேட்டை அஜித்தை நேரில் சந்தித்து கேட்ட ரசிகர்: தல கூறிய பதில்.?;

Update: 2021-02-04 17:17 GMT

தல அஜித் நடித்துவரும் படம் "வலிமை". இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.இறுதி கட்ட  படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.அந்த வகையில் வலிமை படத்தில் பல முக்கிய பைக் சேசிங் காட்சிகளும், ஆக்ஷன் காட்சிகளும் இருப்பதால் தல அஜித் பல கஷ்டமான ஷாட்டுகளிலும் நடித்து வருகிறார்.

இப்படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வந்தாலும்,  படத்தின் டிரைலர் குறித்து ரசிகர்கள் கடந்த பல மாதங்களாக சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர். ஆனால்  ரசிகர்கள் கேட்டும் வலிமை படத்தின் இயக்குனர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

அந்த வகையில் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது அவரை நேரில் சந்தித்து உள்ளார் எனவும் அஜித்துடன் பத்து நிமிடம் பேசியதாகவும் அப்போது வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டபோது 'பிப்ரவரி இறுதியில்' கண்டிப்பாக வலிமை அப்டேட் வரும் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். தனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கிய அஜித்துக்கு தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை அந்த ரசிகர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News