'டாக்டர்' படம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட படக்குழுவினர்..!

'டாக்டர்' படம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட படக்குழுவினர்..!;

Update: 2021-02-02 19:18 GMT

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள படம் டாக்டர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில் சிவகார்த்திகேயன் உள்பட படக்குழுவினர் அனைவரின் டப்பிங் பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டதாக  அறிவித்துள்ளனர்.

அந்த வகையில் டாக்டர் படத்தை பற்றி சிவகார்த்திகேயன் ட்விட்டர் பக்கத்தில் கூறுவது:இயக்குனர் நெல்சன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றும் இந்த குழுவினருடன் பயணம் செய்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார். டாக்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி சில நாட்களில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அனைவரும்  வாழ்த்துக்களையும் கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

Similar News